தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நவ. 26ம் தேதி பொது விடுமுறை – அரசாணை வெளியீடு!!

0
TamilNadu CM
TamilNadu CM

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் கூடுதலாக 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புயல் அதிதீவிரமாக இன்று இரவு முதல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்து உள்ள நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அரசாணை வெளியீடு:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று இன்று இரவு 8 மணிமுதல் கரையை கடக்க தொடங்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன. இன்று பிற்பகல் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு உள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 13 மாவட்டங்களுக்கு நவ. 26ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். தற்போது வெளியிடப்பட்டு உள்ள அரசாணையில் 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13 மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here