சூப்பரான வறுத்து அரைத்த மட்டன் கிரேவி – செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!!

0
mutton gravy
mutton gravy

மட்டன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிக பிடித்தமான உணவு. இதில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தை சுத்திகரித்து உள்காயங்கள் ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் மட்டன் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும். இப்பொழுது மட்டனை வைத்து சூப்பரான ரெசிபி எப்படி செய்வது என பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

Spicy-Mutton-Curry-Ingredients
Spicy-Mutton-Curry-Ingredients
  • மட்டன் 1/2 கி.
  • மல்லி 2 தேக்கரண்டி
  • மிளகு 2 தேக்கரண்டி
  • இஞ்சி சிறிதளவு
  • தேங்காய் அரை மூடி
  • பூண்டு 4 பல்
  • சீரகம் 1 தேக்கரண்டி
  • பட்டை, கிராம்பு
  • பெரிய தக்காளி – 1
  • சிறிய வெங்காயம் 150 கிராம்.
  • வரமிளகாய் 7
  • மஞ்சள்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய்யை சூடாக்கி அதில் மல்லி சேர்த்து வதக்கவும் அதன் பின் சோம்பு சேர்த்து வதக்கி பிறகு மிளகு, வரமிளகாய், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் அதனை அரைத்துக்கொள்ளவும். பிறகு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு, முழு சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அவை வதங்கியதும் அதனை நாம் இதற்கு முன் அரைத்து வைத்ததுடன் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

mutton gravy
mutton gravy

இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதங்கியதும் மட்டனை சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியது மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மூடி வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கினால் சூடான சுவையான வறுத்து அரைத்த மட்டன் கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here