மெத்தனால் கலந்த சானிடைசர் பயன்படுத்துவதால் பார்வையிழப்பு ஏற்படும் – சி.ஜி.எஸ்.ஐ அறிக்கை!!

0

இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் (CGSI) தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் 120 க்கும் மேற்பட்ட கிருமிநாசினி மீது “எரிவாயு குரோமடோகிராபி” பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சி.ஜி.எஸ்.ஐ அறிக்கை:

COVID-19 தொற்றுநோயால் ஏற்கனவே அதிகப்படியான உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில் இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் (CGSI) நடத்திய அறிவியல் ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சு மெத்தனால் உள்ளன, அவற்றில் 45 பாட்டிலில் உள்ள லேபிள் விவரக்குறிப்புகளுடன் பொருந்தவில்லை. இந்த நச்சு மெத்தனால் மீளமுடியாத பார்வை நரம்பு சேதம் மற்றும் குருட்டுத்தன்மை போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

சிஜிஎஸ்ஐ மும்பை, நவி மும்பை, தானே, மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்தையில் கிடைக்கும் கை சுத்திகரிப்பு மருந்துகள் (சானிடைசர்) குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் ஒவ்வொன்றிலும் ஆல்கஹால் அளவை சரிபார்க்க சோதனைகளை மேற்கொண்டது. சானிடைசர் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அதன் மேல் அச்சிடப்பட்டு உள்ள லேபிள்களில் குறிப்பிடப்பட்டவற்றுடன் பொருந்துமா என்பதையும், பயனருக்கு தீங்கு விளைவிக்கும் ஏதேனும் மோசமான பொருள் உள்ளதா என்பதையும் சரிபார்க்க ஆய்வு நடத்தப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார அவசரநிலை காரணமாக, பல போலி சானிடைசர் உற்பத்தியாளர்கள் வணிகத்தில் நுழைந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை அவர்கள் பின்பற்றாதது மற்றும் கலப்படம் ஆகியவை பயனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மேலும் நச்சு மெத்தனால் தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை, குருட்டுத்தன்மை, கோமா மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் 30 மணிநேரத்திற்கு பிறகு உடல்நலனில் தீவிர பாதிப்புகளை சந்திப்பார். சிலரது உடலில்முன்பே இருக்கும் தோல் கோளாறுகள் அல்லது கண் பிரச்சினைகள் அல்லது பலவீனமான கல்லீரல் அல்லது சிறுநீரக செயல்பாடு போன்றவை இதன் விளைவை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here