வறுத்து அரைத்த ஹெல்தியான “கோவைக்காய் பன்னீர் குழம்பு” ரெசிபி – வாங்க சுவைக்கலாம்!!

0

இன்னைக்கு நாம என்ன சமைக்க போறோம்னா ஒரு சூப்பரான, ஹெல்த்தியான கோவைக்காய் பன்னீர் குழம்பு. கோவைக்காய் சாப்டுறதுனால சர்க்கரை நோய், வயிற்று புண், அல்சர் எல்லாம் போய்டுங்க. கோவைக்காய் கசப்பா இருக்குனு யாரும் சமைக்கிறதே இல்ல. ஆனால், இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் டெய்லி செய்வீங்க.

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – ஒரு கப்

பன்னீர் – ஒரு கப்

பெ. வெங்காயம் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீ ஸ்பூன்

சீரகம் – ஒரு டீ ஸ்பூன்

சோம்பு – ஒரு டீ ஸ்பூன்

புலி கரைசல் – ஒரு கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் தனியா, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் எல்லாத்தையும் தேவையான அளவு எடுத்து பக்குவமாக வறுத்து அரைச்சு வச்சுக்கணும். ஒரு காடாயில எண்ணையை ஊத்தி காஞ்சதும் பன்னீரை பொண்ணிறமாக வறுத்து எடுத்துக்கோங்க.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்போ ஒரு வாணலியை எடுத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு போட்டு வெங்காயத்தை அரைச்சு விழுதை சேர்த்து வதக்கனும். பச்சை வாசனை போன அப்புறம் நறுக்கி வச்ச கோவைக்காய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கனும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலா எல்லாம் சேர்த்து கிளறிட்டு புளி கரைசலையும் சேர்க்கனும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊத்திக்கோங்க. இதுல வறுத்த பன்னீரையும் சேர்த்து நல்லா கொதிச்ச அப்புறம் இருக்குங்க. ரொம்ப டேஸ்டியா இருக்கும் சப்பாத்தி, தோசைக்கும் வச்சு சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here