அனைத்து சத்துக்களும் நிறைந்த கார “முளைகட்டிய பச்சை பயறு” ரெசிபி – வாங்க பார்க்கலாம்!!

0

காலை உணவு எவ்வளவு அவசியமானது என்று தெரியாமல் சிலர் காலையில் சாப்பிடுவதே இல்லை. காலையில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. அதிலும் சத்தான உணவுகளை சாப்பிடுவதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம், அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் முளைகட்டிய பச்சை பயிறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பச்சைப்பயறு – 200 கி

கேரட் – 1

தேங்காய் – 4 துண்டுகள்

இஞ்சி – சிறிய துண்டு

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

புதினா – 4

வெள்ளரிக்காய் – 1

கொத்தமல்லி இலை – சிறிதளவு

இந்து உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

பச்சை பயிரை நன்றாக சுத்தம் செய்து 8 அல்லது 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின் எடுத்து தண்ணீரை வடித்துவிட்டு ஒரு வெள்ளை துணியால் இரவு முழுவதும் கட்டி வைக்கவும். காலையில் பார்க்கும்பொழுது நன்றாக முளைகட்டி இருக்கும். துணியில் இருந்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும். பின் ஒரு கேரட்டை துருவி வைத்து கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேங்காய், இஞ்சி துருவ வேண்டும். வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மல்லி மற்றும் புதினா இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி அனைத்தையும் நன்றாக முளைகட்டிய பயறுடன் கலக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளலாம். இவற்றை வாரத்திற்கு மூன்று முறை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சருமத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் பச்சை பயிரை உணவில் சேர்க்கும்பொழுது முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. முடி நன்றாக வளரும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். முளைகட்டிய பச்சை பயிரை காலையில் எடுத்துக்கொள்வதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here