நரை முடியை இயற்கையான முறையில் கருமையாக்க – சூப்பரான டிப்ஸ்!!

0
hair growth
hair growth

தலைமுடி பிரச்சனைகளுக்கு நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் பொருட்களை உபயோகித்து இளநரை, முடி உதிர்வு போன்ற பல பக்கவிளைவுகளை சந்தித்து வருகிறோம். இதில் சிறுவயதினருக்கு கூட தோன்றும் பெரிய பிரச்சனை இளநரை தான். இளநரையை போக்க வீட்டிலேயே எளிய முறையில் Hair Dye தயாரிக்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு இயற்கையாகவே கருமையை தரும்.

தேவையான பொருட்கள்:

Hair-Spa
Hair-Spa
  • மருதாணி பவுடர்
  • எலுமிச்சை
  • அவுரி போடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
  • சோளமாவு
  • உப்பு
  • நெல்லிக்காய் பவுடர்

செய்முறை:

முதலில் மருதாணி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு இந்த இரண்டையும் கலந்து 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

hair
hair

அதன்பின் காலையில் எழுந்ததும் தலைக்கு ஷாம்பு சேர்த்து குளித்து (குறிப்பு: தலையில் எண்ணெய் பசை சுத்தமாக இருக்க கூடாது) முடியை காய வைத்து அதில் மருதாணி மற்றும் எலும்பிச்சை கலவையை தேய்க்க வேண்டும். பின்பு குறைந்தது 2 மணி நேரத்திற்கு பிறகு தலைமுடியை அலசவும்.

hair
hair

மறுநாள் நெல்லிக்காய் பவுடர், அவுரி போடி, சோளமாவு, சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து அதனை தலை முடியில் தேய்த்து 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்பொழுது தான் தலைமுடியின் உள்பக்கம் வரை செல்லும். இந்த Hair Dye தலை முடியை 30 நாட்கள் வரை கருமையாக்கும். தொடர்ந்து 6 மாதம் செய்து வந்தால் இயற்கையாகவே முடி கருமை கிடைக்கும். பொடுகும் வராது. அடர்த்தியான முடியையும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here