மழைக்கு இதமான மஷ்ரூம் சூப் – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0
mushroom soup
mushroom soup

காளான் சைவ உணவு வகைகளில் மிக சத்துகள் நிறைந்த உணவு வகை ஆகும். காளான் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கிறது. மேலும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை காளான் சாப்பிட்டு வந்தால் தவிர்க்கலாம்.இப்பொழுது புதிய முறையில் காளான் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Cream-of-Mushroom-Soup-Ingredients
Cream-of-Mushroom-Soup-Ingredients

காளான் 200 கிராம்

பச்சைமிளகாய் 3

பெரிய வெங்காயம் 2

பூண்டு 3 பல்

மிளகுத்தூள் 2 தேக்கரண்டி

சோளமாவு 2 தேக்கரண்டி

பால் 1/2 டம்ளர்

உப்பு தேவையான அளவு

வெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் நன்கு வதங்கியதும் அதனை இறக்கி வைக்கவும்.

cream-mushroom-soup-3
cream-mushroom-soup-3

ஒரு சிறிய பௌலில் கெட்டி பால் மற்றும் சோளமாவை சேர்த்து கலக்கவும். கெட்டி சேராமல் நன்கு கலக்கிக்கொள்ளவும். பின்பு நாம் வதக்கி வைத்துள்ள காளானை பாதி எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Cream-of-mushroom-soup
Cream-of-mushroom-soup

இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து அதில் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி மீதமுள்ள காளானை அதில் சேர்த்து வதக்கவும். நாம் கலந்து வைத்துள்ள சோளமாவு, பால் கலவையை அதில் ஊற்றி கிளறவும். பிறகு அரைத்து வைத்துள்ள காளானை அதில் சேர்த்து கிளறவும்.

mushroom soup
mushroom soup

இப்பொழுது அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி மிளகு சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து இறக்கினால் சூடான சுவையான காளான் சூப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here