செப்டம்பர் 7 முதல் உயர்நீதிமன்றம் நேரடி விசாரணை – நிர்வாககுழு கூட்டத்தில் முடிவு!!

0
chennai high court
chennai high court

கொரோனா பொதுமுடக்கத்தால் செயல்படாமல் இருந்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடியாக விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் 25 ஆம் தேதி இந்திய அரசால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றமும் செய்யபடாமல் இருந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

chennai high court
chennai high court

பொது முடக்கம் முடிந்த பிறகு வழக்குகளை விசாரித்து கொள்ளலாம் என்றும் முக்கிய வழக்குகளை காணொளி காட்சி வாயிலாக விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல் நீதிமன்றம் செயல்பட்டது. ஆனால், பொது முடக்கம் நீடிக்கப்பட்டதால் அனைத்து வழக்குகளும் காணொளி காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டது.

நிர்வாகக் குழு கூட்டம் முடிவு:

தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் பல தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டது. அதே போல் பொது முடக்கத்தால் 160 நாட்கள் மூடப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் நேரடியாக விசாரணை நடத்தலாம் என்று நிர்வாகக் குழு கூட்டம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2 நீதிபதிகள் கொண்ட 6 அமர்வுகள் நேரடியாக விசாரணை நடத்தலாம் என்றும் தனி நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் வழக்கினை காணொளி கட்சி வாயிலாக விசாரிக்கப்படும் என்று நிர்வாகக் குழு கூட்டம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here