செப்டெம்பரில் இஎம்ஐ சலுகை நீடிக்கப்படுமா??

0
RBI
RBI

நாடெங்கிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 31 ஐ தாண்டி வங்கி ஈஎம்ஐ சலுகை நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈஎம்ஐ

கொரோனா மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று நாடுகள் எங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். வங்கி கடன்களுக்கு ஈஎம்ஐ கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

emi
emi

எனவே மக்களின் நலன் கருது ரிசர்வ் பேங்க் 3 மாதங்களுக்கு அதாவது மார்ச் முதல் மே 31 வரை வங்கி ஈஎம்ஐ ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்தும் லாக்டவுன் நீடிக்கப்பட்டதால் ஆகஸ்ட் 31 வரை இந்த சலுகையை நீடித்தது. தற்போது செப்டம்பரில் இந்த சலுகை நீடிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

bank loan
bank loan

இதற்கு வங்கி தரப்பில் இருந்து, இந்த சலுகை நீடிக்கப்பட்டால் வங்கிகளின் சொத்து மேலாண்மை பாதிக்கப்படும் என இக்ரா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளனர். இந்த சேவையை நீடிக்கும் தேவை இப்பொழுது இல்லை. மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்ட நிலையில் அவர்களின் நிதி நிலைமையும் மேம்பட்டுள்ளது. இதனால் வங்கி ஈஎம்ஐ சலுகையை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமான எந்த தகவலும் வெளி வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here