சூப்பரான சில்லி இட்லி – குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க மிச்சமே வைக்க மாட்டாங்க!!

0
Chilli-Idli-Fry
Chilli-Idli-Fry

பொதுவாக குழந்தைகளுக்கு இட்லி என்றால் பிடிப்பதில்லை. அதனால் சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். எனவே குழந்தைகளுக்கு இட்லியை வைத்து சில்லி இட்லி செய்து கொடுங்கள். மிச்சமே வைக்கமாட்டாங்க. வாங்க சில்லி இட்லி எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

chilli idly
chilli idly
  • இட்லி 4
  • இஞ்சி – சிறிது
  • பச்சைமிளகாய் 2
  • கருவேப்பிலை
  • பெரிய வெங்காயம் 2
  • குடைமிளகாய் 1
  • மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
  • சாஸ் 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் இட்லியை சதுரமாக நறுக்கிய எடுத்துக்கொள்ளவும். அதனை ஈரமில்லாமல் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பிரியாமல் இருக்கும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இட்லியை பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

chilli idly
chilli idly

அதன்பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தட்டிவைத்துள்ள பூண்டை அதில் சேர்க்கவும். அதன்பின் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

Chilli-Idli-Fry
Chilli-Idli-Fry

அதன்பின் சிறிது சிறிதாக நறுக்கிய குடைமிப்பிள்ளையை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் பொரித்து வைத்த இட்லியை சேர்த்து வதக்கி இறக்கினால் சூப்பரான சில்லி இட்லி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here