தமிழகத்தில் செப். 7 முதல் பயணியர் ரயில்கள் ரயில்கள் இயக்கம் – நாளை முன்பதிவு தொடக்கம்!!

0
IRCTC

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில்களை இயக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை (செப் 5) 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் ரயில் நிலையத்திற்கு 90 நிமிடத்திற்கு முன்னதாகவே வர வேண்டும் எனவும், சோதனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான பெட்டி இருக்காது. மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரயில்கள் விபரம்:

1. சென்னை சென்ட்ரல் – கோவை (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்)
2. கோவை – சென்னை சென்ட்ரல்
3. சென்னை சென்ட்ரல் – கோவை (இரவு நேர சிறப்பு ரயில்)
4. சென்னை எழும்பூர் – திருச்சி
5. சென்னை எழும்பூர் – காரைக்குடி
6. சென்னை எழும்பூர் – மதுரை
7. சென்னை எழும்பூர் – தூத்துக்குடி
8. கோவை – மயிலாடுதுறை
9. சென்னை சென்ட்ரல் – கோவை (அதிகாலை ரயில்)

ரயில்களுக்கான நேர விபரங்கள் IRCTC அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here