காரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

0

காளானில் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறு உள்ளது. காளான் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள செலினியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். பற்கள், நகங்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி உயிரணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது. இத்தனை நன்மைகள் உள்ள காளானை எப்படி சுவையாக சமைப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

காளான் – 200கி

சின்ன வெங்காயம் – 50 கி

குடைமிளக்காய் – 1

தக்காளி – 1

காய்ந்த மிளகாய் – 2

சோம்பு – தாளிக்க

இஞ்சி, பூண்டு – விழுது

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீ ஸ்பூன்

கருவேப்பிலை – 10

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, காய்ந்த மிளகாய் தாளித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்த வதக்கவும். பொண்ணிறமாக வந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போனவுடன் தக்காளி, குடைமிளகாய், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து கிளறவும். அதனுடன் 200 கிராம் காளானை சுத்தமாக கழுவி இரண்டாக நறுக்கி சேர்க்க வேண்டும். 2 நிமிடம் லேசாக கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடியால் மூடி வைக்க வேண்டும். காளான் ஈரத்தன்மை கொண்டவை அதனால் அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

5 நிமிடம் கழித்து திறந்து பார்த்ததால் தண்ணீர் வற்றி சுக்கா பதத்திற்கு வெந்து இருக்கும். இறுதியாக மிளகு தூளை தூவி பரிமாறலாம். சுவையான குடைமிளகாய் காளான் சுக்கா தயார். இந்த காளான் சுக்காவை, சாம்பார் சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here