Saturday, April 20, 2024

சீரம் நிறுவனத்தில் நவ.28ம் தேதி நேரில் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி – விரைவில் கொரோனா தடுப்பூசி??

Must Read

ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் நவ.28 ஆம் தேதி நேரில் சென்று சீரம் நிறுவனத்தை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

“கோவிஷீல்ட்” தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கியது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நாடு முழுக்க கொரோனவை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டினர். ஒவ்வொரு நாடும் அதற்காக இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்டெராசெனெகா நிறுவனமும் இணைந்து கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

covidshield vaccine in austrazeneca
covidshield vaccine in austrazeneca

இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தற்போது இந்த கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. மேலும் இவை ஆஸ்டெராசெனெகா என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருவதாக தெரிய வருகிறது. இந்தியாவின் சீரம் நிறுவனம் இந்த கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என்ற பெயரையும் வைத்துள்ளது. இந்த கோவிஷுல்டு கொரோனா தடுப்பூசி முதல் 2 கட்ட சோதனையில் வெற்றி பெற்றது.

நரேந்திர மோடி ஆய்வு:

இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்நிறுவனம் தற்போது தயாரித்து வரும் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி முதல் இரண்டு கட்ட சோதனையில் வெற்றி பெற்ற நிலையில் 3 ஆம் கட்ட இறுதி சோதனையில் உள்ளது. இவை 70% சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்டெராசெனெகா நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

pm narendira modi visit seram institute
pm narendira modi visit seram institute

இந்நிலையில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தை பார்வையிட பிரதமர் மோடி வரும் நவ.28 ஆம் தேதி நேரில் செல்ல இருக்கிறார். சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் இத்தகைய மருந்தை 50% இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த மருந்து ரூ.1000 க்குள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -