நீண்ட காலம் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற வேண்டுமா? இந்த ராசியினரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள்!!

0

ஒவ்வொரு நபருக்கும் தனது வாழ்க்கை துணை நல்ல படியாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது இயற்கையிலேயே அமைந்து விடும் ஆனால் சிலருக்கு அவரின் குணத்திற்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடைய ஜோதிட ரீதியாக ராசி பொருத்தத்தை வைத்து காணலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவர்கள். இவர்களுக்கு காதல் உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். மேஷ ராசியில் பிறந்த ஆணோ அல்லது பெண்ணோ துலாம், மிதுனம், சிம்மம் மற்றும் கன்னி போன்ற ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்ய வேண்டும்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் உள்ளவர்கள். இவர்களின் ராசி நாதர் சுக்கிரன் என்பதால் இவர்கள் காதலில் அதிகம் உணர்ச்சிவசப்படுவர். இவர்களுக்கு விருச்சகம், கடகம், கன்னி மற்றும் மீனம் போன்ற ராசியில் பிறந்தவர்கள் இவர்களுக்கு பொருத்தமாக இருப்பர்.

மிதுனம்

மிதுன ராசி காரர்கள் காதலில் அதிகம் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பர். இவர்களுக்கு வர போகும் வாழ்க்கைத்துணை குடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் வாழ்க்கைத்துணையை அன்பாக பார்த்துக்கொள்வதில் சிறந்தவர்கள். இவர்களுக்கு’ பொருத்தமான ராசிகள் துலாம், சிம்மம், தனுசு மற்றும் மகரம்.

கடகம்

கடக ராசிக்கு சந்திரன் ராசி நாதன் என்பதால் இவர்கள் எளிதாக காதலில் விழுந்துவிடுவர். வெளுத்ததெல்லாம் பால் என நம்புபவர். இவர்களின் மென்மையாகவும், அன்பாகவும் பழகுவார்கள். கடக ராசிக்கு என்ற இணை ராசி சிம்மம், மகரம், மீனம் போன்றவையே.

சிம்மம்

சிம்ம ராசியினர் கம்பீர தோற்றமுடையவராகவும், ஆற்றல் மிக்கவராகவும் இருப்பர். இயற்கையாகவே இவர்களின் தோற்றம் அழகு போன்றவை எதிர் பாலினத்தை ஈர்க்கும். சிக்க ராசியினருக்கு பொருத்தமான ராசி கும்பம், விருச்சகம், துலாம் மற்றும் மேஷம்.

கன்னி

கன்னி ராசியினர் காதலில் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆற்றல் பெற்றவர்கள். கன்னி ராசியினர் எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள். கன்னிராசியினருக்கு பொருத்தமான ராசி துலாம், கடகம், மகரம்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் அளவாக தான் அனைத்திலும் செயல்படுவர். எதிலும் சரிசமமான நியாயம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். துலாம் ராசியினருக்கு ஏற்ற துணை ராசிகள் கன்னி, சிம்மம், மகரம்.

விருச்சக ராசி

விருச்சிக ராசியினர் காதலில் அவளவு பிணைப்பு உள்ளவர்கள். எந்த விஷயத்திலும் கட்டுப்பாடுடன் செயல்படுபவர்கள். இவர்கள் வாழ்க்கைத்துணையுடன் உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் உறவு கொண்டிருப்பர். விருச்சிக ராசிக்கு பொருத்தமான ஜோடி ராசிகள் சிம்மம், கன்னி மற்றும் கடகம்.

தனுசு ராசி

தனுசு ராசியினர் எப்பொழுது புது விதமான வாழ்க்கையையே விரும்புவர். இவர்களின் வாழ்கை முறையிலும் அப்படி தான். இவருக்கு வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். தனுஷுக்கு ராசிக்கு பொறுத்தமான ராசி மேஷம், துலாம், கும்பம்.

மகர ராசி

மகரராசியினரை வாழ்க்கைத்துணையாக பெற போகிறவர்கள் ஆதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்கள் அன்பை பெறுவது அவ்வளவு எளிது அல்ல. மகர ராசியினர் காதலால் கல்லான இதயம் கூட காதல் வயப்படும். அந்த அளவுக்கு இவர்களின் காதல் புனிதமானதாக இருக்கும். மகர ராசியினருக்கு பொருத்தமான ராசிகள் மீனம், ரிஷபம், விருச்சிகம்.

கும்பம்

கும்ப ராசியினர் மிகவும் எதார்த்தமானவர்கள். தனது வாழ்க்கைத்துணை பேச்சை கேட்டு நடப்பவர்கள். வாழ்க்கையில் விளையாட்டுத்தனமாகவும் பொறுப்பில்லாமல் இருப்பார்கள். கும்ப ராசிக்கு ஏற்ற ராசி மிதுனம், துலாம் மேஷம்.

மீனம்

மீன ராசியினர் இயற்கையாகவே கவர்ச்சிகரமாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும், அதீத காதல் உடையவராகவும் இருப்பர். மீன ராசிக்கு பொருத்தமான ராசிகள் மகரம், துலாம் மற்றும் கடகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here