அசத்தலான ‘சைவ மீன் வறுவல்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
veg fish fry
veg fish fry

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். இதனால் அசைவ பிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பர். அதனால் இப்பொழுது சைவத்தில் அசத்தலான மீன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • வாழைக்காய் – 3
  • வரமிளகாய் – 8
  • மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • சோளமாவு – 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் வாழைக்காயை முழுசாக நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து இறக்கியதும் அதனை தோலுரித்து இடைப்பகுதியாக (cross) வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

veg fish fry
veg fish fry

பிறகு அதில் நடு பகுதியை மட்டும் வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இது மீன் துண்டுகள் போல இருக்கும். பிறகு சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

veg fish fry
veg fish fry

அதன்பின் ஒரு பௌலில் அரைத்து வைத்த விழுது மற்றும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து அதில் மஞ்சள்தூள், சோளமாவு, உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு வாழைக்காயில் இந்த மசாலாக்களை தடவவும். 10 நிமிடம் நன்கு ஊறிய பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து மீன் வறுப்பது போல வறுத்து எடுக்கவும். எண்ணெயில் போட்டு பொரித்தும் எடுக்கலாம். இப்பொழுது சுவையான ‘சைவ மீன் வறுவல்’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here