ஒரே மாதத்தில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
hairfall
hairfall

தலைமுடி உதிர்வு என்பது இப்பொழுது உள்ள தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஆகும். முடி உதிர்வது கூட பரவாயில்லை. ஆனால் வழுக்கை விழும் அளவிற்கு மாறினால் மனதில் நிம்மதியே இருக்காது. முடி உதிர்வதை நாம் ஆரம்பத்திலேயே கவனித்து அதற்காக வழிமுறைகளை செய்து வந்தால் வழுக்கை விழும் அளவிற்கு போகாது. ஆனால் நம்மில் பலர் அதை செய்வதே கிடையாது. இப்பொழுது முடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வதை தடுக்க..

நமது உடல் சூடு அதிகரித்தாலும், இரும்பு சத்து குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். இதனால் இரும்பு சத்து அதிகம் உள்ள காய்கறி, பழ வகைகளை நாம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

hairfall
hairfall

உடல் சூட்டை குறைக்க பகல் பொழுதில் நல்லெண்ணெய், மிளகு மற்றும் பூண்டு இவற்றை காய்ச்சி ஆறியதும் கால் கட்டை விரலில் ஒரு சொட்டு விட்டு 2 நிமிடங்கள் கழித்து காலை கழுவி விட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சியடைவதை நீங்களே உணர்வீர்கள். இதனால் மன அழுத்தம், உடல் சூடு அனைத்தும் குறையும். இதனால் முடி உதிர்வு பிரச்சனையும் குறையும். ஏனெனில் நாம் எவ்வளவு தான் தலை முடிக்கு பராமரிப்பு கொடுத்தாலும் உடலையும் பராமரித்தால் மட்டுமே இந்த பிரச்னையை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.

வழிமுறைகள்

  • ஆளி விதையில் ஒமேகா-3 மற்றும் ப்ரோடீன்கள் உள்ளன. இதனால் தலை முடிக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு முடி உதிர்வையும் தடுக்கும். இந்த ஆளி விதையை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு ஜெல் போல வரும். அதனை முடியின் வேர்ப்பகுதியில் தடவி 1 மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் புதிய முடிகள் வளரும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

hair growth
hair growth
  • வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளதால் அது முடி வளர்ச்சியை தூண்டும். எனவே வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை கலந்து முடியின் வேர் வரை மசாஜ் செய்து விட்டு குளித்தால் முடி உதிர்வது தடுத்து முடிகள் வளரும்.
hair
  • முட்டை வெள்ளை கருவை தனியாக எடுத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வை தடுக்கலாம்.
  • செம்பருத்தி இலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெயை கலந்து அதனை குளிக்க செல்லும் முன் தலைக்கு மசாஜ் செய்து விட்டு குளிக்க சென்றால் முடி அடர்த்தியாக வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here