‘தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்’ – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் என விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அறிவிப்பு

நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடல்நீரை  குடிநீராக்கும் திட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று மாலை நான்கு மணிக்கு விழா ஆரம்பமாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆத்தூரில் நடைபெற்ற மகளிர் பூத் கமிட்டி நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்றார். முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனால் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள தாமதமானதாக தெரிவிக்கப்பட்டது.

‘இலங்கை செல்ல இந்திய வான்வழியை பயன்படுத்தலாம்’ – பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய அரசு அனுமதி!!

சிறிது நேர தாமதத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில், 1,503 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் தமிழகத்தில் இனி குடிநீருக்கு பஞ்சமே இருக்காது என கூறினார். மேலும் தமிழகத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தவே குடிமராமத்து திட்டம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும் என உறுதி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிச்சாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here