‘இலங்கை செல்ல இந்திய வான்வழியை பயன்படுத்தலாம்’ – பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய அரசு அனுமதி!!

0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இந்திய வான்வழியை அவர் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அனுமதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை செல்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்வழியை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக முக்கிய தலைவர்களின் விமானங்கள் சர்வதேச வான்வழி எல்லையை பயன்படுத்த அனுமதி பெறுவது வழக்கமாகும். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தும்படி அனுமதி கோரியபோது பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி கொடுக்காமல் மறுத்து விட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜீ தமிழ் பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

காஷ்மீரில் மனித உரிமைமீறல் குற்றங்கள் நிகழ்வதாக பாகிஸ்தான் அரசாங்கம் பதில் தெரிவித்திருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த செயல் விதிமீறலாக கருதப்பட்டது. தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இலங்கை செல்லவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச விதிப்படி இந்திய வான்வழியை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தகவல்கள் வெளி வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here