Friday, May 17, 2024

பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் மரணம் – கவலையில் ரசிகர்கள்!!

Must Read

பிரபல ஹாலிவுட் நடிகர்  புற்று நோயால் நேற்று காலமானார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிரபல நடிகர்:

சட்விக் போஸ்மேன்,43 ஹாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் என்று குறிப்பிடப்படுகிறார். அவர் “பிளாக் பாந்தர்” என்ற படத்தின் மூலமாக பலரது கவனத்தையும் பெற்றவர். அவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த அவெஞ்சர் படத்தின் பாகங்களில் நடித்துள்ளார். மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த படங்களில் நடித்த முதல் கறுப்பின நடிகர் இவர் மட்டும் தான்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

black panthar
black panthar

அவர் தனது இயல்பான நடிப்பின் மூலமாக பலரது மனதையும் வென்றவர். அவர் கடந்த 2016 ஆம் வருடம் பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதனை பற்றி அவர் யாரிடமும் அதிகமாக பகிர்ந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த சின்ன வயதில் ஒரு திறமையான நடிகரை இழந்துவிட்டதாக ஹாலிவுட் வட்டாரம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

பலரும் இரங்கல்:

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் மற்றும் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஜோ பிடன் தந்து டீவீட்டில் “அனைவர்க்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு. பலரும் அவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் மார்வெல் ஸ்டுடியோஸ் தனது  அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல நடிகர்கள் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். ஹாலிவுட் திரையுலகிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

 பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்??

4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும், ஒலிம்பிக் தொடரின் அடுத்த பதிப்பானது நடப்பாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, வரும் ஜூலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -