டேஸ்ட்டியான சிக்கன் சிந்தாமணி – இதோ உங்களுக்காக!!

0
sinthamani chicken
sinthamani chicken

சிக்கன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் சிக்கனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. இப்பொது சிக்கனை வைத்து சூப்பரான கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

sinthamani chicken
sinthamani chicken
  • சிக்கன் 1/2 கி
  • சின்ன வெங்காயம் 100 கி
  • மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  • இஞ்சிபூண்டு விழுது
  • கறிவேப்பிலை
  • சோம்பு
  • எலுமிச்சை
  • வரமிளகாய் 6

செய்முறை

நாம் சிக்கனில் பல வகையான ரெசிபிகளை செய்துளோம். ஆனால் இப்பொழுது செய்யப்போகும் சிந்தாமணி சிக்கன் எளிய பொருட்களை வைத்து செய்வதால் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகும் ஒரு ரெசிபி தான் சிந்தாமணி சிக்கன்.

sinthamani chicken
sinthamani chicken

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாடை போகும்வரை வதக்கவும்.

chicken-chinthamani-recipe
chicken-chinthamani-recipe

அதில் காய்ந்தமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் சிக்கனை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சைப்பழம் பிழிந்து வதக்கவும் . பின் நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து இறக்கினால் சிந்தாமணி சிக்கன் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here