பிக்பாஸ்-ஐ  தொகுத்து வழங்க 1050கோடி சம்பளம் வேணும் – நடிகரின் பேச்சால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி!!

0

இந்தியில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 வது சீசனை தொகுத்து வழங்க, சல்மான் கான் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பளம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பளம்:

மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல  மொழிகளில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாலிவுட் பிரபலம் சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ள, பிக் பாஸ் 16வது சீசன் விரைவில் துவக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, இதுவரை 350 கோடிகளை சம்பளம் பெற்று வந்த சல்மான் கான், தற்போது தனது சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி 1050 ரூபாய் கேட்டுள்ளாராம்.

இவர் ஏற்கனவே, இந்த நிகழ்வில் இருந்து விலக வேண்டும் என பலமுறை முயற்சிகள் செய்தும் ஏற்பாட்டாளர்கள் அவரை, சமாதானம் செய்ததால் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்த முறை சம்பளத்தை உயர்த்தினாலாவது தன்னை இதிலிருந்து விடுவிப்பார்கள் என்று நினைத்த சல்மான் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என பாலிவுட் திரையுலகில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here