2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க உத்தரவு..!

0
Medicine
Medicine

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரஸ்க்கு எதிராக கண்டுபிடிக்க பட்ட மருந்தை விரைவாக பரிசலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ்:

கொரோனா நோய் தொற்றுக்குக்கான எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், ஒரு மருந்தினை கண்டு பிடித்து உள்ளார். அவர் மனு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது” கொரோனா வைரசுக்கு மருந்து ஒன்று கண்டு பிடித்து உள்ளேன். இந்த மருந்தை பற்றிய ஆய்வு கட்டுரைகளை இந்தியா ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளேன்.

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆனால் இன்னும் எந்த உத்தரவும் அவர்கள் சார்பில் அளிக்க படவில்லை. இதனால் ஐகோர்ட் எனது மனுவை பரிசலித்து அதற்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் பிறப்பிக்கும் படி உத்தரவு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் கேட்டு கொண்டு உள்ளார்.

நீதிபதிகள் விசாரிப்பு:

இந்தனை அடுத்து மனுவை காணொலிக்காட்சி காட்சி மூலம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அதில் மனுதாரர் சார்பில் ஆஜர் ஆன வக்கீல் கூறியதாவது” மனுதாரர் கண்டு பிடித்து உள்ள மருந்து ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ எனப்படும் மருந்து ஆகும். அந்த மருந்து சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடலில் நுழைய விடாமல் தடுக்கும். மேலும் இந்த மருந்து கொரோனா வைரஸ் காய்ச்சல் ஆகாமல் தடுக்கும். கூடுதலாக இந்த மருந்து ரூபாய் 2 மட்டுமே. இந்த மருந்து ஏழை மக்கள் அனைவர்க்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்”என்று கூறி உள்ளார்.

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – உலகளவில் 4வது இடம்..!

இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது ” மனுதாரர் இந்த மருந்திற்கான ஆய்வு கட்டுரையையும் மருந்தையும் திருப்பி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அவர் அனுப்பியதும் இரு தரப்பும் உடனடியாக உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here