இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – உலகளவில் 4வது இடம்..!

0
corona virus in india
corona virus in india

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 16 நாட்களில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து பரவியது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதுவரை 2,98,283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 8,501 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 94,041 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதியாகி உள்ளது. அதற்கு அடுத்து தமிழகத்தில் 38,716, . டெல்லியில் 32,810, குஜ ராத்தில் 21,521, உத்தர பிரதேசத்தில் 11,610, ராஜஸ்தானில் 11,600, மத்திய பிரதேசத்தில் 10,049 வைரஸ் தொற்று உள்ளது.

கோவையில் குழப்பான முடிவுகள் – 6 பேருக்கு மீண்டும் கொரோனா சோதனை..!

உலகளவில் அமெரிக்காவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here