10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு..!

0
Students
Students

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹால் டிக்கெட்:

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் (நுழைவுச் சீட்டு) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் நுழைவுச் சீட்டை பெற தனது பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு தொடர்பான விபரங்களுக்கு, நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here