என்னை மன்னித்து விடு வடிவேலு – மனோபாலா விளக்க கடிதம்..!

0

பிரபல மற்றும் முன்னணி காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு. சில காரணத்தினால் கடந்த 2 வருடங்களாகத் திரையுலகிருந்து சற்று விலகி இருக்கிறார்.அனால் ட்ரெண்டிலே மட்டும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில்  உலா வருகிறார். வடிவேல் கடந்த சில நாட்கள் முன் மனோபாலா சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றினை தெரிவித்திருந்ததார் அதற்கு மனோபாலா மன்னிப்பு கேட்டு விளக்கம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்

வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மே 19-ம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பியுள்ளார்,அதில் அவர் என்ன கூறியிருந்தார் என்றால் “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

மனோபாலா விளக்கம்

வடிவேலும் – சிங்கமுத்தும் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தப் புகார் தொடர்பாக மனோபாலா அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:”எனக்கு நெருங்கிய நண்பர் வடிவேலு. மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சில வார்த்தைகள் பேசி வந்தேன். அவர் ஒரு அப்ராணி. யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். அவரை யாரோ யூஸ் பண்ணிக் திசை திருப்புகிறார்கள். இந்த கொரோனா ஊரடங்கில் கூட வடிவேலு நகைச்சுவை இல்லாத தொலைக்காட்சியே இல்லை. அப்படி ஒரு மண் சார்ந்த கலைஞர் வடிவேலு.சிங்கமுத்து பல பேட்டிகளில் சொல்லியிருப்பதைத் தான் எனது பேட்டியிலும் சொல்லியிருக்கிறார்.

அவருடைய திரையுலகப் பயணத்தைப் பற்றிப் பேசும் போது வடிவேலுவைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால் வடிவேலு இல்லாமல் சிங்கமுத்து கிடையாது. அப்படித்தான் வடிவேலு பற்றி பேச்சு வந்தது. இதை ஏன் வடிவேலு இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.நமது நண்பர் மனோபாலா இப்படிச் செய்துவிட்டாரே என்று வடிவேலு நினைத்திருக்கலாம். என்னை அழைத்து அது வேண்டாம் மனோபாலா தூக்கிவிடு என்று சொல்லியிருக்கலாம். நடிகர் சங்கத்தில் போய் புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. வடிவேலு என்னை மன்னித்துவிடு. உனது நட்பை நான் இழக்க விரும்பவில்லை.அனைத்துமே கூடிய விரைவில் மாறும்”என மனோபாலா தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here