ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

0

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கூந்தல் என்பது முக்கியமான ஒன்று. நம் அழகை மேலும் அதிகப்படுத்தி காட்டுவது கூந்தல் தான். நம் தலையில் முடி இல்லை என்றால் பார்ப்பதற்கு அழகாகவே இருக்காது. ஆண்களுக்கு வழுக்கை தலை வருவதற்கு காரணமே அவர்கள் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான். மேலும், ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கு மரபணுக்களும் ஒரு காரணமாகும். இளமையில் வரும் வழுக்கையை தடுப்பதற்கு கீழே உள்ளவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தினாலே போதும் வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் தலையில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும், ஆலிவ் ஆயில் நம் தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. ஆலிவ் ஆயிலை சூடேற்றி, ஒரு ஸ்பூன் பட்டை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காய்ச்சி வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் முடி நன்றாக வளர்வதை உணரமுடியும்.

கீழாநெல்லி:

கீழாநெல்லி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. வழுக்கை விழுவதற்கான காரணங்களில் ஒன்று உடலில் அதிக சூடு இருப்பது தான். இதற்கு வாரம் இரண்டு முறை கீழாநெல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேய்த்து வந்தால் உடல் சூடு தணிந்து தலையில் முடி நன்றாக வளரும். அல்லது, கீழாநெல்லியை மோர் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்றே நாட்களில் உடல் சூடு தணிந்துவிடும்.

வெங்காயம்:

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தோல் உரித்து அதனை நன்றாக அரைத்து, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். தலையில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து அலசினால் முடி நன்றாக வளரும். புழுவெட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் வராது. மேலும், வெங்காயம் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

தாமரை இலை:

தாமரை இலையை சுத்தமாக கழுவி நீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டம். இதற்கு சம அளவு நல்ல எண்ணெய் எடுத்து காய்ச்சி, தாமரை இலை சாறையும் சேர்த்து தைலமாக தயார் செய்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். நல்ல எண்ணையில் வைட்டமின் E உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.

நேர்வாளங்கொட்டை:

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். நேர்வாளங் கொட்டையை வாங்கி உடைத்தால் அதன் உள்ளே பருப்பு இருக்கும், அதை எடுத்து சிறிது நீர்விட்டு அரைத்து வழுக்கை உள்ள இடத்தில் தினமும் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். வழுக்கை விரைவாக போக வேண்டும் என்றால் தவறாமல் தினமும் தேய்க்க வேண்டும்.

கீழாநெல்லி வேர்:

கிராமகளில் அதிகமாக கிடைக்க கூடிய கீழாநெல்லி செடியின் வேரை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்ச வேண்டும். இந்த எண்ணையை தினமும் பயன்படுத்தலாம். தலை மட்டுமின்றி நகத்திற்கும் பயன்படுத்தினால் நகம் நன்றாக வளரும். கீழாநெல்லியில் அதிக நன்மைகள் உள்ளது.

தாமரை பூ:

தாமரை பூவை காய்ச்சி குடித்தால் முகம் மற்றும் முடி சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு முடியில் வெடிப்பு இருக்கும் இதனால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, தலையில் எவ்விதமான பிரச்சனைகள் இருந்தாலும் தாமரை பூ கஷாயம் அல்லது தாமரை பூ டீ குடிக்க விரைவில் குணமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here