காற்று மாசுபாடு உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை – பசுமை தீர்ப்பாயம் அதிரடி!!

0
firecrackers

டெல்லி மற்றும் ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தடைவிதித்த நிலையில் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணிநேரம் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

பட்டாசு வெடிக்க தடை

சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது. ஆனால் அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு அனுப்பினர். தமிழகம் விடுத்த மனு குறித்து புதன் கிழமை அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையில் விசாரணை நடந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

air polution
air polution

அந்த விசாரணையில் காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி மற்றும் ஒடிசாவில் இன்று நள்ளிரவு முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்தது. இந்த தடை ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளடங்கும் என்று தெரிவித்து.

அனுமதி பெற்ற மாநிலங்கள்

காற்று மாசு அதிகம் காணப்படும் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கலாமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், காற்று மாசு அதிகம் காணப்படும் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் 122 நகரங்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

burnt crackers
burnt crackers

அதில் மனு தாக்கல் அதிகம் வந்ததால் தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் காற்று மாசு அதிகம் காணப்படும் 122 நகரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது. ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here