சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

0

தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்:

சீரஞ்சீவி தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியாக வலம் வருகிறார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ள இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். எம்எல்ஏ ஆன பின்பு அதை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசியலில் இருந்தாலும் நடிப்பை அவர் விடவில்லை. அவருக்கு வயது 65. கடந்த ஆண்டு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படம் வெளியானது. அதில் நயன்தாரா மற்றும் தமன்னா இவருக்கு ஜோடியாக நடித்தனர். அதையடுத்து ஆசார்யா படத்தில் நடிக்க இருக்கும் சிரஞ்சீவி, படப்பிடிப்பு தொடக்கத்தில் கொரோனா டெஸ்ட் எடுத்த பொழுது கொரோனா தொற்று உறுதியானது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

எனவே, நான் என்னை தனிமைபடுத்திக் கொண்டேன். ஆனால் ‘எனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை மற்றும் என் உடல்நிலை குறித்து தகவல்களையும் அவ்வப்போது தெரிவிக்கிறேன்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த 5 நாட்களாக என்னை சந்திக்க வந்த அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here