தலைமுடி கொட்டுவதின் தீவிரத்தை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன??? தீர்வு காண்போம் வாருங்கள்!!!

0

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையினால் நாம் நமது உடல்நலத்தை இழந்து கொண்டுள்ளோம். அதிலும் முக்கியமாக ஆண்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுவது தலைமுடி சார்ந்த பிரச்சனையினால் தான். பலரும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன சொல்கின்றனரோ அவற்றை எல்லாம் தங்கள் தலைமுடியில் பரிசோதித்து பார்த்து விடுவார்கள். அவரவர் தலைமுடியில் என்ன பிரச்சனையோ அதற்க்கு ஏற்ற செயல்முறைகளை செய்தால் மட்டுமே பிரச்சனைக்கான தீர்வை நாம் அடையாளம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் மருந்துகளை அடுத்தவர் சொல்கிறார் என்று நமது தலையில் போடக் கூடாது. அப்படி செய்தால் பிரச்சனையின் தீவிரம் தான் அதிகமாகும். சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம் தலைமுடி முதலில் கொட்டமல் இருந்தால் தானே அதை நன்றாக பராமரிக்க முடியும். பொதுவாக யாருக்கும் தலைமுடி உதிர்கிறதா அல்லது தலைமுடி இழப்பு ஏற்படுகிறதா என்பதே தெரியவில்லை. அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் காண்போம்.

சாதாரண நிலை:

நாம் தினமும் தலை வாரும் போது சீப்பில் எப்போதும் முடிவரத்தான் செய்யும். அது 50 முதல் 100 வரை இருந்தால் சாதாரணநிலை தான். இப்படி முடி வருவது சிறிது நாட்களிலேயே சரியாகி விடும். நாம் நமது உடலையும், தலைமுடியையும் சரியாக பராமரிக்காததால் இந்த பிரச்சனை வருகிறது. நாளடைவில் இது தானாக சரியாயிடும். உடல் சூடு, மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனை, சரியாக தூங்காமல் இருப்பது, காய்ச்சலோடு இருப்பது, மாதவிடாய் பிரட்சனையின் போது இவை எல்லாம் சாதாரணமாக சரியாகிவிடும் பிரச்சனைகள்.

தீவிர நிலை:

சாதாரண நிலையைப்போல் இல்லாமல் நாம் தலை வாரிக்கொண்டிருக்கும் போதே சீப்பை தாண்டியும் தரை எல்லாம் முடி கிடப்பது, தலைக்கு குளிக்கும்போது அதிகமாக முடி உதிர்வது, தலையை துண்டைக்கொண்டு துவட்டும் போது அதிகமாக முடி வருவது, தூங்கி எழுந்திருக்கும் போது தலையணையில் முடி கிடப்பது இவை எல்லாமே முடிஉதிர்வின் தீவிரத்தை நமக்கு உணர்த்துபவை,இது தான் முடி இழப்பு எனப்படுகிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் தொடர்ந்தோ 10 நாட்களுக்கு மேலும் இருந்தால் நாம் உடனே நமது தலை முடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முடி இழப்பு:

முடி உதிர்வு சாதாரண நிலையில் இருக்கும்போது நம்மால் அதை சுலபமாக சரி செய்ய முடியும். ஆனால் முடி உதிர்வு அதிகமாகி கூந்தல் இழப்பு நிலையில் உள்ளவர்களுக்கு சுலபமான முறையில் சரிசெய்ய முடியாது. மேலும் மனஅழுத்தம் தொடர்பான பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளவர்களுக்கும் உடனடியாக சரிசெய்ய முடியாத நிலைக்கு சென்று விடுவர். முடி இழப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு முடியின் வளர்ச்சியானது பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய உரோமங்கள் வளராது.

முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி கிடைக்கும்!!

உடல் உபாதைகளால் அதிகப்படியான மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள், மரபணு காரணமாக முடி இழப்பு உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கான தீர்வு காண முடியும்.

கூந்தல் இழப்பு, பொடுகினால் முடி உதிர்வு, வட்ட திட்டுக்கள் போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி உடனடியாக அதற்கான தோல் மருத்துவரை சந்தித்தால் மட்டுமே நமது தலைமுடி பிரச்சனைகளைசரி செய்ய முடியும். அதைவிட்டு என்ன பிரச்சனை என்று முழுமையாக தெரியாமல் நாம் ஏதாவது செய்தால் பிரச்சனை இன்னும் அதிகமாகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here