முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – மத்திய அரசு தகவல்!!

0
Central Govt
Central Govt

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் வரிசையில் உள்ள நாடுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. தற்போது கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை படி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அளிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்ய உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசி பணிகளை தொடங்கிய நிலையில். இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி கண்டுள்ளது. தற்போது இந்தியாவும் தடுப்பூசி மக்களுக்கு போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி நேற்று தடுப்பூசி வழங்கும் மணிகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் முதல் மூன்று இடங்களில் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளன. நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

COVID-19 mRNA Vaccine and syringe with needle injection.

நாடு முழுவதும் முதற்கட்டமாக 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் படி 50 வயதுக்கு மேற்பட்ட 26.50 கோடி பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 1 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுடன் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட 2.50 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட்போனில் 25% அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள்!!

இதன்படி தற்போது முன்னுரிமை படி முன்பதிவு செய்தவர்களுக்கு தான் முதலில் தடுப்பூசி வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்து செல்லும் கேரியர், குப்பிகள் மற்றும் தடுப்பூசியை பாதுகாக்கும் ஐஸ் கட்டிகள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரங்களை சேமித்து வைக்க “கோ-வின்” என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here