அசைவ பிரியர்களுக்கு அசத்தலான ரெசிபி – சூப்பரான க்ரீன் சிக்கன் ரெசிபி!!

0

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே கொள்ளை பிரியம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குழந்தைகளும் இந்த சிக்கனை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்பொழுது இந்த சிக்கனை வைத்து சுவையான க்ரீன் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

புதினா – 1 கொத்து

கொத்தமல்லி – 1 கொத்து

கறிவேப்பில்லை – தே.அளவு

தேங்காய் – அரை முடி

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 4

உப்பு – தே.அளவு

எண்ணெய் – தே.அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். சிக்கனில் சுத்தமாக தண்ணீரே இல்லாமல் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மக்கள் இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி அந்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.

தண்ணீர் எல்லாம் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும். இப்பொழுது இந்த சிக்கனை தனியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, பச்சைமிளகாய், சீரகம் மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது சிக்கனை அரைத்த அதே எண்ணெயில் இந்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும், பச்சை வாடை போகும் வரை வதக்கவும். ஓரளவிற்கு மசாலா நிறம் மாறியதும் அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி இறங்கினால் சுவையான க்ரீன் சிக்கன் ரெசிபி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here