சத்துணவு மாணவர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த அரசு முடிவு..!

0

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை மார்ச் 25 முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள் மூடி இருப்பாதல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மூடி இருப்பாதல் நிறைய அரசு உதவி பெரும் மாணவர்கள் சத்துணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பள்ளி கல்வித்துறை உத்தரவு..!

இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.

இதனால் சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here