தமிழக அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பாபிஜி அப்பளம் கொரோனாவை ஒழிக்கும் – மத்திய அமைச்சர் பேச்சுக்கு மக்கள் கண்டனம்..!

இதையடுத்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் என்றும் 11ம் வகுப்பிற்கு விண்ணப்ப படிவம் வழங்கும் தேதி மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகள் வெளியிட்டுள்ளது. மேலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ – மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here