சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

0
Gas Cylinder
Gas Cylinder

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சிலிண்டர்:

தற்போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் காஸ் சிலிண்டரின் விலையும் சேர்ந்துள்ளது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலம் தற்போது காஸ் சிலிண்டரின் விலை ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலிண்டரின் விலை ரூ.710 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதனை தொடர்ந்து இந்த மாதம் 4ம் தேதி அன்று ரூ.25, பின்னர் கடந்த 15ம் தேதி அன்று ரூ.50 சிலிண்டரின் விலையில் உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மீண்டும் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here