#NZvsAUS டி20 – நியூஸிலாந்து அணி த்ரில் வெற்றி!!

0

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது டி20 போட்டிகளை விளையாடி வருகின்றன. தற்போது இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா:

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியினர் தற்போது முதலாவதாக டி 20 போட்டிகளை விளையாடி வருகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது நினைவிற்கும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் நியூஸிலாந்து அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 219 ரன்களை குவித்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர் கப்டில் 97 ரன்களை குவித்தார். மேலும் வில்லியம்சன் 53 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சர்ட்ஸன் அதிகபட்சமாக 3 விக்கெட்டை வீழ்த்தினார். கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

#TNvsMP விஜய் ஹசாரே கோப்பை – மத்திய பிரதேச அணி அசத்தல் வெற்றி!!

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நியூஸிலாந்து அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் 78 ரன்களை குவித்தார். இருந்தும் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்களே குவித்தது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. நியூஸிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சான்ட்னர் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here