தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி!!

0

தமிழகத்தில் இன்று போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். தற்போது வழக்கம் போல இயங்காத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து துறை:

போக்குவரத்து ஊழியர்கள் தங்களது 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கூறி பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி இன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட 9 தொழிற் சங்க அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன. இவர்கள் நிலுவை தொகை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட பேருந்துகள் மிக குறைந்த அளவில் தான் இயங்கி வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் சென்னை பல்லவன் சாலை பணிமலையில் அதிமுக தொழிலாளர் சங்கத்தினர் மட்டும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனால் திருப்பூர், மயிலாடுதுறை, ராஜபாளையம், நெல்லை, கடலூர், ஈரோடு, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னையில் தற்போது குறைந்த அளவு பேருந்துகள் தான் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here