பிங்க் நிற உடையில் ரசிகர்களை திணற வைத்த கேப்ரியல்லா – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு பிசியாக இருந்து வரும் கேப்ரியல்லா, விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். அந்நிகழ்ச்சியில் கேப்ரியல்லா அணிந்து வந்த மார்டர்ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை கேப்ரியல்லா

நடிகை, நடன வடிவமைப்பாளர் என்ற பன்முகத்திறமை கொண்டவர் கேப்ரியல்லா. விஜய் டிவியின் தயாரிப்புகளில் ஒருவரான கேப்ரியல்லா சில திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சினிமாவில் சாதிக்க வேண்டும், இன்னும் வளர வேண்டும் என்ற எண்ணத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்த கேப்ரியல்லாவுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. புதிய படவாய்ப்புகள், நிகழ்ச்சிகள் என்று ஒன்றுமே இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கேப்ரியல்லாவுக்கு கிடைத்தது.

சூர்யாவின் #ComeBack – அதிரவைத்த ஷூட்டிங் புகைப்படங்கள்!!

போட்டியின் ஆரம்பத்தில் இவருக்கு சில சறுக்கல்கள் காணப்பட்டாலும் போகப்போக நின்று நிதானமாக விளையாட ஆரம்பித்தார். கேப்ரியல்லா யார் என்பதை மறந்திருந்த ரசிகர்களுக்கு கேப்ரியல்லாவை நினைவு கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து வருகிறார் கேப்ரியல்லா. இந்த வாரம் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக கேப்ரியல்லாவின் அம்மா கலந்து கொள்ள உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் பிங்க் நிற உடையில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கேப்ரியல்லாவின் அழகான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here