இந்தியாவில் மேலும் 39,726 பேருக்கு கொரோனா – பீதியில் மக்கள்!!

0

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா:

கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் இல்லாத கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக சுகாதாரத்துறை மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தமிழகம், மராட்டியம் போன்ற சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 39,726 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,59,370 ஆக அதிகரித்துள்ளது.

‘நான் ஒன்னு கவர்மெண்ட் காசுல ஹெலிகாப்டர்ல போகல’ – கமல்ஹாசன் ஆவேசம்!!

கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 20,654 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,83,679 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2,71,282 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் ஓரே நாளில் 22.02 லட்ச பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 3.93 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here