கொளுத்தும் கிளாமரில் பிக் பாஸ் கேபி – வைரலாகும் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

திரையுலகில் சிறு வயது நாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் தான் பின்னாளில் முன்னணி நடிகையாக வலம் வருவர். அந்த வகையில் சிறுமியாக அறிமுகமான கேபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரம் கேபி

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான் ஒரு காலகட்டத்திற்கு பிறகு முன்னணி நடிகைகளுக்கே கடுமையான போட்டியாக இருப்பர். அந்த வகையில் அனிகா, ரவினா போன்றோர் வரிசையில் தற்போது இருப்பவர் தான் கேபி.

பிறந்தநாளை வனிதாவுடன் சேர்ந்து கொண்டாடிய சிம்ரன், பிரஷாந்த் – வைரலாகும் புகைப்படம்!!

இவர் முதன் முதலாக தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த “3” திரைப்படத்தில் இவர் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்திருப்பார். அப்போது அவருக்கு மிகவும் சின்ன வயது தான். பின், இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தங்கையாக நடித்தார்.

அதே போல் இவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றும் உள்ளார். இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது.

இப்படியாக இருக்க, இவர் சமுத்திரக்கனியின் “அப்பா” திரைப்படத்தில் முக்கியமான திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக தான் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்று கூட கூறலாம். இப்படியான சூழலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவருக்கும் பாலாஜிக்கு காதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதனை இருவருமே மறுத்து விட்டனர். ஆனால், பாலாஜி ஷிவானியுடன் பேசும் போது இவருக்கு பயங்கரமான கோபம் ஏற்பட்டது. இப்படியாக வித்தியாசமாகவே கேபி அந்த வீட்டில் நடந்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கேபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here