மேக்கபே இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் 2 வருடங்களுக்கு மேல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது இந்த சீரியல். இதுவரையிலும் சீரியல்களில் அண்ணன் தம்பி கதைகளை மையமாக வைத்து எடுத்ததில்லை. அதனாலேயே இந்த சீரியல் டாப் ஹிட்.r

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறந்தநாளை வனிதாவுடன் சேர்ந்து கொண்டாடிய சிம்ரன், பிரஷாந்த் – வைரலாகும் புகைப்படம்!!

அதிலும் கதிர் முல்லை ஜோடிக்கு மவுசு அதிகமானது. சித்ரா தான் இந்த சீரியலில் அதிக வரவேற்பை பெற்றது. சித்ரா இறந்ததற்கு பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எதிர்ப்புகள் எழுந்தாலும், தற்போது காவியாவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை வைத்து பல ட்விஸ்ட்டுகளை கொண்டு வந்துள்ளனர். கண்ணனுக்கும் ஒரு ஜோடி, அதனால் அவர் செய்யும் சில திருட்டு தனங்கள் என விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமும் சேர்ந்து டீ குடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் மேக்கப் எதுவுமே போடாமல் இருக்கும் புகைப்படம். தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here