ராதிகா, சரத்குமாரின் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0
ராதிகா குடும்பத்துடன் பகை கொண்ட முக்கிய பிரபலம் - Ego பிரச்சனையால் 17 ஆண்டாக சேராத சோகம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை, நடிகர்களாக திகழும் சரத்குமார், ராதிகா மீது காசோலை மோடி வழக்குதொடரப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செக் மோசடி வழக்கு

அரசியல்வாதியும், நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவியான ராதிகா மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது சரத்குமார் ராதிகாவுடைய மேஜிக் பிரேம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு ரேடியேன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளனர்.

அதனை படம் வெளியிடுவதற்கு முன்பு கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் படம் எதுவும் எடுக்கவும் இல்லை. அந்த நிறுவனத்திற்கு பணத்தையும் கொடுக்கவும் இல்லை. அந்த பணத்தை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை தயாரித்தனர். மேலும் ரேடியேன்ஸ் நிறுவனத்திற்கு அவர்கள் கொடுத்த செக் பௌன்ஸாகி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் ரேடியேன்ஸ் நிறுவனம் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் ராதிகா இந்த வழக்கில் ஆஜராகவே இல்லை. பரப்புரை காரணமாக இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மோசடி செய்தது சரத்குமார் ராதிகா தான் என்று கூறியுள்ளார். இது அதிகாரபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில் சரத்குமாரின் மீது 7 வழக்குகள் விகிதம் ஓராண்டு சிறை தண்டனையும், ராதிகா மீது 2 வழக்குகள் விகிதம் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறை தண்டனை என்பதால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here