பிறந்தநாளை வனிதாவுடன் சேர்ந்து கொண்டாடிய சிம்ரன், பிரஷாந்த் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது பிரஷாந்த் திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் படக்குழுவினர் கேக் கட் செய்து கொண்டாடிய வீடியோ புகைப்படம் வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார்

பிரபல நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா தனது திருமண வாழ்க்கையில் ஆரம்பித்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதோடு இல்லாமல் தனது மகன் ஸ்ரீ ஹரிக்காக தற்போது வரை போராடி வருகிறார். அதன் பிறகு நடந்த பல பிரச்சனைகளில் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் இவர் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முதல் நாளே தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். யாரையுமே பேச விடாமல் தான் வைத்தது தான் சட்டம் என்றும் இருந்தார். இவருக்கு வத்தி குச்சி வனிதா என்றும் மக்கள் பெயர் வைத்தனர்.

யார் என்ன பேசுகிறார்கள், எங்கு என்ன செய்கிறார்கள் என்பதே இவரின் ஒட்டுமொத்த வேலையாகவே இருந்தது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த “குக் வித் கோமாளி” பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அதன் பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். மேலும் டைட்டிலையும் கைப்பற்றினார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அங்கு தான் அவருக்கு நடந்த பெரிய பிரச்சனையே. இந்நிலையில் தற்போது அவர் பிரஷாந்த் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வனிதா நடிப்பதாலேயே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரஷாந்திற்கு நேற்று பிறந்தநாள், ஏப்ரல் 6 இல் சிம்ரனுக்கு பிறந்த நாள். எனவே செட்டில் கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here