கழுத்தில் முறுக்கு செயின்…மடித்து கட்டிய வேஷ்டி…கையில் கல் மோதிரம் பக்கா ரவுடியாக மாறிய பிக் பாஸ் கேபி!!!

0

விஜய் டிவியில் ஒரு நடன நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தவர் கேப்ரில்லா. இவர் தற்போது பளபளவென இருக்கும் வேஷ்டி சட்டையுடன் , கழுத்தில், கையில் ரவுடிகள் அணியும் நகைகளுடன் ஒரு ரவுடி போல மாறி உள்ளார். அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன்னு ஜூனியர்ஸ் என்ற  நடன நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் கேப்ரில்லா. அதன் பிறகு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் கதாநாயகியின் தங்கச்சியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , அப்பா போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும் விஜய் டிவியின் 7 ஆம் வகுப்பு C பிரிவு சீரியலில் நடித்து உள்ளார். அதன் பிறகு பல விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உள்ளார்.

மேலும் அவரின் இந்த புகழுக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி பண பரிசை தட்டிச் சென்றார். மேலும் அவர் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் அவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு, கழுத்தில் முறுக்கு செயின், கையில் கல் மோதிரம், கண்ணில் கண்ணாடி போட்டுக்கொண்டு முழுக்க முழுக்க ஒரு ரவுடி தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த புது அவதாரம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here