அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 300 பேரை உளவு பாத்தாரா பிரதமர் மோடி? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 300 பேரை இஸ்ரேலிய நிறுவனம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உளவு பார்த்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் எதிர்கட்சி தலைவர்கலும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரும் அடங்கி உள்ளனர்.

இஸ்ரேலை சேர்ந்த அரசு சாரா அமைப்பின் (NGO) பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலை 17 சர்வதேச ஊடகங்களும் பாரிஸை சேர்ந்த கிரிட்டன் சோரிஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தற்போது வெளியிட்டுள்ளன. இப்பட்டியலில் மொத்தம் 50,000 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளவர்களில் 300 பேர் இந்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள், முக்கிய பத்திரிகையாளர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. குறிப்பாக பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த செய்தி வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here