குலதெய்வம் அருளை பெற பௌர்ணமி வழிபாடு – ஆன்மீக விளக்கம்!!

0
chandra bagavaan
chandra bagavaan

நாம ஒவ்வொருத்தருக்குமே ஒரு குலதெய்வம் கண்டிப்பா இருக்கும். நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் தான் நம்ம குலதெய்வம்னு சொல்லுவாங்க. நாம எந்த காரியம் தொடங்குவதற்கு முன் குலதெய்வத்தை வழிபடுவது ரொம்ப முக்கியம். இந்த கால கட்டத்துல பாதி பேருக்கு அவங்க குலதெய்வமே தெரியுறது இல்ல. நாம ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குலதெய்வத்தை நெனச்சு காணிக்கை முடுஞ்சு வச்சா எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொல்லுவாங்க. எப்போ எப்படி வழிபட்டால் குலதெய்வத்தின் அருள பெற முடியும்னு பாக்கலாம்.

வழிபாட்டுமுறை:

பௌர்ணமி அண்று அதிகாலையில் எழுந்து சுத்தமா குளித்து விட்டு சிவப்புநிற ஆடை உடுத்த வேண்டும். பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு மாலை அணிவித்தது, பச்சை அரிசி கோலம் போட்டு மஞ்சள்,குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.அதன்மேல் நெய் தீபம் போட வேண்டும். முடிந்தால் சக்கரைப்பொங்கல்,மூன்று அல்லது ஐந்து பழங்கள் வைத்து பூஜை செய்யலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

durga

பின் நமது வேண்டுதல்களை முன் வைத்து வணங்க வேண்டும். காலைநேர பூஜை முடிந்த பின் அன்று முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். மாலை ஒருமுறை குளித்துவிட்டு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். சந்திரன் உதயத்திற்கு பிறகு சந்திர தரிசனம் செய்த்துவிட்டு அன்றைய விரதத்தை முடித்துக்கொள்ளாம்.

full-moon-night

பதினொன்று பௌர்ணமி தொடர்ந்து குலதெய்வத்தை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிச்சயமாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குலதெய்வம் படம் இல்லாதவர்கள் மஞ்சளால் உருவம் வைத்து குலதெய்வமாக வழிபடலாம். குலதெய்வ கோவில் அருகிலே இருந்தால் மிக சிறப்பு.

விரதநேரத்தில் செய்ய கூடாதவை:

  • தேவையில்லாத வார்த்தைகளை பேச கூடாது.
  • பகலில் தூங்க கூடாது.
  • முடிந்த அளவு மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • தொலைக்காட்சிகளில் தேவையில்லாத காட்சிகளை பார்க்க கூடாது.
  • உடலுறவு கூடாது.
  • மாதவிலக்கான நேரங்களில் விரதம் மேற்கொள்ள வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here