குறைந்தது தங்கம் விலை – குஷியில் மக்கள்!!

0
gold
gold

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் வரும். இந்த நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைவது தங்கம் வாங்குவோர் இடையே மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் 22 காரட் சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ.38,048க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முகூர்த்த நாட்கள்

திருமண நிகழ்ச்சியில் அணிவிப்பது, உடனுக்குடன் பணமாக மாற்றுவது என தங்கத்திற்கு எப்போதும் இந்தியாவில் மவுசு அதிகம். கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் தங்கம் விலை எகிறியது. இது வழக்கம் போல நடுத்தர வர்க்கத்தை பாதித்தது. சுப நிகழ்ச்சிக்கு தங்கம் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வரும் நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.

இன்று, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு (22 காரட் ) ரூ. 136 குறைந்து, ரூ. 38,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 35 குறைந்து ரூ. 4,738க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here