மாணவர்களுக்கு 2 GB இலவச டேட்டா திட்டம் – வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!

0

கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் மாதம் 2021 வரை ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவச 2 GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மேலும் அந்த இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இலவச டேட்டா திட்டம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாக கற்பிக்கபடுகின்றன. கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு 2 GB இலவச டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டேட்டா திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை பயன்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது. தற்போது இந்த இலவச டேட்டா திட்டத்தை யார், எவ்வாறு பயன்படுத்த முடியும் என சில வழிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி மாணவர்கள் 2 GB இலவச டேட்டா திட்டத்தை பயன்படுத்தும் வகையில் டேட்டா கார்டு என்ற தரவு அட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த தரவு அட்டைகள் எல்காட் நிறுவனம் மூலம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், தொழிநுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு கல்வி உதவி பெறும் சுயநிலை கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இலவச டேட்டா வழங்குவது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனகளுடன் டேட்டாக்கான விலையை நிர்ணயிப்பது குறித்த ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது தமிழக அரசு. அத்தனை மாணவர்களுக்கும் சேர்த்து இலவச டேட்டா வழங்குவதற்கு மாநில அரசுக்கு 80 முதல் 100 கோடி ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளது.

மாஸாக வெளியான மாஸ்டர் திரைப்படம் – உற்சாகத்தில் தனிமனித இடைவெளியை மறந்த ரசிகர்கள்!!

மாணவர்கள் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தொலைபேசி எண், ஆதார் எண், கல்லூரி அடையாள அட்டை, ரேஷன் கார்ட் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளவேண்டும். மாணவர்கள் பதிவு செய்த பின் அவர்களின் தொலைபேசிக்கு அரசிடமிருந்து குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்குவது இதுவே முதல் முறையாகும். எனவே மாணவர்கள் அனைவரும் இந்த திட்டத்தை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here