சுவையான மீன் பொலிச்சது – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
fish polichathu
fish polichathu

கடல் உணவுகளில் மீன்கள் மிக சிறப்பான உணவு ஆகும். மீன்களில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் ஒமேகா 3 ஆசிட் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த மீனை வைத்து மீன் பொலிச்சது பாப்போம்.

தேவையான பொருட்கள்

fish polichathu
fish polichathu

சங்கரா மீன் 1/2 கி, சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஓரு தேக்கரண்டி, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 2 பல், வரமிளகாய் 7, உப்பு தேவையான அளவு, வாழை இலை .

செய்முறை

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு வரமிளகாயை கடாயில் எண்ணையை ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.(குறிப்பு: அடிபிடிக்கும் அளவிற்கு வறுத்தால் சுவை நன்றாக வராது) வறுத்து அரைத்து எடுத்த மசாலாவை கழுவி வைத்த மீனுடன் சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். இப்பொழுது இந்த மீன் பொலிசத்தை 2 முறைகளில் செய்யலாம்.

fish polichathu
fish polichathu

மசாலா தடவி உறவைத்துள்ள மீனை எடுத்து ஒரு வாழையிலையில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் மூடி வைத்து நீராவியில் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான மீன் போலிச்சது தயார். இது நீராவியில் வேக வைப்பதால் அனைவரும் உகந்ததாக இருக்கும்.

fish polichathu
fish polichathu

மற்றொரு முறையில் மசாலா தடவிய மீனை இலையில் மடித்து கட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இலையில் மடித்துவைத்த மீனை போட்டு வறுக்க வேண்டும். 15 நிமிடம் இருபுறமும் திருப்பி போட்டு வறுத்து இறக்கினால் மீன் பொலிச்சது தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here