தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் தீ விபத்து – தேர்தல் ஆவணங்கள் நாசமா??

0

தென்னிந்திய நடிகர் சங்கம் தி நகர் அபிபுல்லா சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டடத்தில் தரை தளத்தில் செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, வழக்குகள் தொடரப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், இந்த தேர்தல் குறித்த முக்கிய ஆவணங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரசு அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறை சிறப்பு அதிகாரி ஒருவர், நடிகர் சங்க அலுவலகத்தை நியமித்து வருகிறார்.

ஆந்திராவில் பரவும் மர்ம நோயால் பொதுமக்கள் அச்சம்!!

இதனையடுத்து, இன்று காலை சுமார் 6 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ பற்றி எறிந்தது. இதனை அங்குள்ள செக்யூரிட்டி தீயணைப்பு துறைக்கு தெரிவித்தார். தகவல் அறிந்த சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் முக்கிய ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்டவை எரிந்திருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. மழை காரணமாக மின்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here