அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழக அரசு அசத்தல் திட்டம்!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் - ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம்? அரசு முடிவு!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் மற்றும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு நிச்சயமாக கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பரிசு:

அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையின்படி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை தகுதி அடிப்படையில், அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற அரசு சிறிது காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டையின் நகலை இணைத்து, www.tnpds.gn.in என்ற இணையதளத்தில் இன்றிலிருந்து டிசம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது மண்டல அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக தான் இருக்கிறது. இதில் பெரும்பாலானோர் விடுத்த கோரிக்கையின் பேரில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!

சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில், அதற்கு முன் மக்களுக்கு வழக்கம் போல் கிடைக்கும் நிவாரண தொகை மற்றும் பொங்கல் பரிசாக கிடைக்கும் 1000 ரூபாய் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. ஆதலால் அனைத்து சர்க்கரை மற்றும் அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here